செய்திகள்

இந்தியாவின் கியூட்டான குட்டிநாயாக ஐதராபாத் ரோஸ்கோ தேர்வு

Published On 2016-09-28 08:20 GMT   |   Update On 2016-09-28 08:20 GMT
இந்தியாவின் கியூட்டான குட்டிநாயாக ஐதராபாத் நகரில் வளர்ந்துவரும் ரோஸ்கோ தேர்வாகியுள்ளது.
ஐதராபாத்:

செல்லப் பிராணிகளை விற்கும் பெட்ஷாப்களுக்கு தேடிசெல்லாமல், பிராணிகள் காப்பகத்தில் இருக்கும் நாய்கள் மற்றும் தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் அணுகுமுறை நாட்டு மக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐதராபாத் நகரில் நாய் கண்காட்சிக்கு ‘பீட்டா’ என்ற பிராணிகள் நல அமைப்பு நடத்தியது.

தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் அறிவுத்திறனுடன் கூடிய அழகான நாய்களுக்கு பரிசுகள் அளிக்கும் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்வையாளர்கள் வாக்களித்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குரிய நாய்களை தேர்வு செய்தனர்.

இதில் ஐதராபாத் நகரை சேர்ந்த ஸ்பந்தனா ராஜ் என்பவர் தத்தெடுத்து வளர்த்துவரும் ‘ரோஸ்கோ’ என்ற குட்டிநாய் முதல் பரிசை தட்டிச் சென்றது. ஒரு டீகடையின் வாசலில் கட்டிவைக்கப்பட்டிருந்த ரோஸ்கோவை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் தத்தெடுத்த ஸ்பந்தனா, அதை பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

கொல்கத்தாவை சேர்ந்த அனன்யா கர்மாகர் வளர்க்கும் ‘நேக்ட்டி’ இரண்டாவது பரிசையும், கோவாவை நேர்ந்த மினிமா பெரெஸ் வளர்க்கும் ‘பேட்டு’ மூன்றாவது பரிசையும் வென்றது.

Similar News