செய்திகள்

ஸ்ரீசைலம் அணை நிரம்பியது சென்னை குடிநீர் தேவைக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு: ஆந்திர மந்திரி தகவல்

Published On 2016-09-28 05:04 GMT   |   Update On 2016-09-28 05:04 GMT
ஸ்ரீசைலம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருவதால் அதிலிருந்து தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

நகரி:

ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பலத்த மழை கொட்டியது.

இதனால் பல மாவட்டங்களில் உள்ள அணை, ஏரிகள் நிரம்பி வழிகிறது.

கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணை தனது கொள்ளளவை எட்டியது. அந்த அணையின் நீர் மட்டம் 885 அடி ஆகும். தற்போது 881.70 அடி நீர் மட்டம் இருக்கிறது.

அணையின் கொள்ளளவு 215 டி.எம்.சி. ஆகும். மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து 197 டி.எம்.சி. கொள்ளவை எட்டி இருக்கிறது.

அணை நிரம்பியதால் அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு தெலுங்கு கங்கை நதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் கண்டலேறு நீர்தேக்கத்துக்கு செல்லும்.

இதுபற்றி ஆந்திர மந்திரி உமா மகேஸ்வரராவ் கூறியதாவது:-

ஸ்ரீசைலம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி வருவதால் அதிலிருந்து தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் திறந்து விடப்பட்டு இருக்கிறது. கண்டலேறு நீர்தேக்கத்தை அடைந்து அங்கிருந்து சென்னை ஏரிகளுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News