செய்திகள்

50 மாற்றுத்திறனாளிகள் உடலுறுப்புகளை தானம் செய்ய விருப்பமனு

Published On 2016-09-27 06:55 GMT   |   Update On 2016-09-27 06:55 GMT
மராட்டிய மாநிலத்தில் மரணத்துக்கு பின்னர் தங்களது உடலுறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்து 50 மாற்றுத்திறனாளிகள் விருப்பமனு அளித்துள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் மரணத்துக்கு பின்னர் தங்களது உடலுறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்து 50 மாற்றுத்திறனாளிகள் விருப்பமனு அளித்துள்ளனர்.

மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகள் மரணத்துக்கு பின்னர் தங்களது உடலுறுப்புகளை தானம் செய்ய நேற்று விருப்பமனு அளித்தனர்.

மராட்டிய மாநில அரசு மேற்கொண்டுவரும் உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள், கோலாப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டீனிடம் தங்களது விருப்பமனுக்களை சமர்ப்பித்தனர். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டர் அமித் சைனி உடனிருந்தார்.

Similar News