செய்திகள்

மத்திய பிரதேசத்தில் குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் பலி

Published On 2016-09-25 16:04 GMT   |   Update On 2016-09-25 16:04 GMT
மத்திய பிரதேசத்தில் லாலுவாடோரா பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
குணா:

மத்திய பிரதேசத்தில் லாலுவாடோரா பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இது பற்றி குணா நகர காவல் நிலைய ஆய்வாளர் விவேக் கூறும்பொழுது, முதற்கட்ட ஆய்வில்  7 பேரும் ஆழம் நிறைந்த தண்ணீருக்குள்  தவறி விழுந்து மூழ்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இன்று மாலையில் குளத்தில் ஒரு சிறுவனின் உடல் மிதந்துள்ளது.  மற்ற சிறுவர்களின் ஆடைகள் குளத்தின் அருகே கிடந்துள்ளன.  இது பற்றி தகவல் அறிந்ததும், நீச்சல் வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி மற்ற உடல்களை வெளியே எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கியவர்கள் தில்லு குஷ்வாஹா (வயது 14), ஹேமந்த் கோரி (வயது 12), திலீப் குஷ்வாஹா (12), விகாஸ் கோரி (13), கரண் (10), கொல்லு கோரி (வயது 12) மற்றும் ஆனந்த் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும் பிப்ராவ்டா கிராமத்தினை சேர்ந்தவர்கள்.  அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

அதேவேளையில், குணா நகர எம்.பி.யான ஜோதிராதித்யா சிந்தியா, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை உடனடியாக வழங்கும்படி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளார்.  இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதனை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News