செய்திகள்

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை தேசிய கட்சியாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

Published On 2016-09-02 14:48 GMT   |   Update On 2016-09-02 14:48 GMT
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. இது தவிர, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன.

அரசியல் கட்சிகள் தேசிய கட்சி அங்கீகாரம் பெற குறைந்தது 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மாநில சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளுடன் சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும். மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் என 4 மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

4 மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியுள்ளது

இந்த அங்கீகாரம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News