செய்திகள்

மெட்ராஸ் உயர் நிதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆக பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2016-07-05 11:06 GMT   |   Update On 2016-07-05 11:06 GMT
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், பாம்பே உயர்நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இனிமேல் சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் பெறும். பாம்பே உயர்நீதிமன்றம் இனி மும்பை உயர்நீதிமன்றம் என மாற்றப்படும். இதேபோல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயரை கொல்கத்தா உயர்நீதிமன்றமாக மாற்றவும் ஒப்புதல் அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெரிய துறைமுகம் அமைக்க கொள்கை அளவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை குறுகிய கால கடன் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Similar News