உள்ளூர் செய்திகள்

சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், அரசு மருத்துவமனை டீன், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம் - நீதிபதிகள் பங்கேற்பு

Published On 2022-06-21 06:01 GMT   |   Update On 2022-06-21 06:10 GMT
  • 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டது.
  • கோவையை சேர்ந்த யோகினி அனிதா யோகா பயிற்சி அளித்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் உலக யோகா தின விழா திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை வரவேற்று பேசினார். திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், யோகா மற்றும் இயற்கை உதவி மருத்துவ அலுவலர் திவான் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவையை சேர்ந்த யோகினி அனிதா யோகா பயிற்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டது. இதில் தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் மற்றும் நீதித்துறை நடுவர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

உலக சமுதாய சேவா சங்கம், திருப்பூர் மண்டல மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள், தவ மையங்கள் சார்பில் உலக யோகா தின விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் நாகராஜன் தலைமை தாங்கி பேசினார். இதில் திருப்பூர் மண்டல செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்சியை ஸ்கை குழும நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் திருப்பூர் மண்டல தலைவர் கருணாநிதி நன்றி கூறினார். இதில் பலரும் பங்கேற்று யோகா செய்தனர்.

Tags:    

Similar News