உள்ளூர் செய்திகள்

காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பங்களா.

கொடைக்கானலில் பங்களாவை சூறையாடிய காட்டு யானைகள்

Published On 2022-07-21 04:39 GMT   |   Update On 2022-07-21 04:39 GMT
  • கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
  • காட்டு யானைகள் நுழையாதபடி நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. விவசாய நிலங்களையும் விவசாயிகளின் உடைமைகளையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. பணப் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விவசாய நிலங்களில் புகாமல் விரட்ட வனத்துறையினர் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழலில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.இன்று விவசாய நிலங்களை சேதப்படுத்துமோ,தங்கள் வீடுகளை சேதப்படுத்துமோ,அல்லது தங்கள் உயிருக்கு உலை வைக்குமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாட்களையும்அச்சத்துடன் கடந்து வருகின்றனர் பேத்துப்பாறை கிராம மக்கள்.

இதே போல் நேற்று புதுக்கோட்டை மன்னர் வாரிசுகளின் பழைய பங்களாவை சேதப்படுத்தியது.முழுமையாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். பொது மக்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் காட்டு யானைகள் நுழையாதபடி நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News