உள்ளூர் செய்திகள்

கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published On 2022-06-26 07:22 GMT   |   Update On 2022-06-26 13:19 GMT
  • கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
  • தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு சுகாதார நிலையங்களில் பல்வேறு கட்டமைப்புகள், புதிய புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு சுகாதார நல வாழ்வு மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம்கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள நலவாழ்வு மையங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நலவாழ்வு மையங்களில் 12 வகையான சேவைகள் மிகச் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு சுகாதார நிலையங்களில் பல்வேறு கட்டமைப்புகள், புதிய புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை, இந்திய அளவில் செயல்படுத்த இன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதனை நேரில் வந்து ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தாலும் கூட, இன்றைக்கு மக்களின் குடியிருப்புகளுக்கே நேரில் சென்று, மருந்துகள் தருவது, மருத்துவம் பார்ப்பது என்பது தமிழகத்தில் மட்டும்தான் நடந்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அரசு கட்டுப்பாடுகள் கொண்டு வரும் என்பதைவிட, அதுகுறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வந்தாலே, நோய்த் தொற்று பாதிப்பு குறையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News