என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "face shield essential"
- கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு சுகாதார நிலையங்களில் பல்வேறு கட்டமைப்புகள், புதிய புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு சுகாதார நல வாழ்வு மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம்கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள நலவாழ்வு மையங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நலவாழ்வு மையங்களில் 12 வகையான சேவைகள் மிகச் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு சுகாதார நிலையங்களில் பல்வேறு கட்டமைப்புகள், புதிய புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை, இந்திய அளவில் செயல்படுத்த இன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதனை நேரில் வந்து ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தாலும் கூட, இன்றைக்கு மக்களின் குடியிருப்புகளுக்கே நேரில் சென்று, மருந்துகள் தருவது, மருத்துவம் பார்ப்பது என்பது தமிழகத்தில் மட்டும்தான் நடந்து வருகிறது.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அரசு கட்டுப்பாடுகள் கொண்டு வரும் என்பதைவிட, அதுகுறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வந்தாலே, நோய்த் தொற்று பாதிப்பு குறையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்