உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை-மறியல்

Published On 2022-08-01 11:28 GMT   |   Update On 2022-08-01 11:28 GMT
  • டாஸ்மாக் கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது.
  • பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு கே.வி.ஆர். நகர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும். எனவே அந்த கடையை அகற்ற வேண்டுமென மாகராட்சி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் இன்று காலை அன்பகம் திருப்பதி தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்றனர்.

இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து அன்பகம் திருப்பதி கூறுகையில், கே.வி.ஆர்.நகர் டாஸ்மாக் கடையால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடையை அகற்ற வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாமல் உள்ளது. 10 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News