உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காட்சி.

அரசு சார்பில் குடியிருப்பு வழங்க கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-09-05 08:06 GMT   |   Update On 2022-09-05 08:06 GMT
  • அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
  • ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் நல்லாத்துபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகேசன் - கலாவதி. முருகேசன் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் சக்திவேல் என்ற மகன் உள்ளார். இதனிடையே பிறந்தது முதல் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் ,அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க கூறி மனு அளித்த நிலையில் அதிகாரிகள் ஒரு லட்சம் வரை கட்ட கூறியுள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகனின் வாழ்க்கையையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு அரசு சார்பில் இடம் வழங்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Tags:    

Similar News