உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்ய பொதுமக்கள் தீவிரம்

Published On 2022-07-03 08:43 GMT   |   Update On 2022-07-03 08:43 GMT
  • பொதுமக்களும் பலமுறை அலைந்த பின்னரே வரன்முறை சான்று பெற முடிகிறது.
  • உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறை செய்து கொண்டும் வருகின்றனர்.

மடத்துக்குளம்:

தமிழ்நாடு அரசின் நகர் ஊரமைப்புத்துறை உத்தரவுப்படி 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த, அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கியவர்கள், அதற்கான வளர்ச்சி கட்டணம், மேம்பாட்டு கட்டணங்களை செலுத்தி மனையை வரன்முறை செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் வாங்கி உள்ள மனைப்பிரிவில், யாராவது ஒரு தனிமனையை அங்கீகாரம் செய்து, அங்கீகார எண் பெற்றிருந்தால் மற்ற மனைகளை எளிதாக வரன்முறை செய்யலாம். அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளன.இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்ய மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இருப்பினும், பொதுமக்களும் பலமுறை அலைந்த பின்னரே வரன்முறை சான்று பெற முடிகிறது.

இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில்சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் மட்டுமே வீட்டுமனை அங்கீகாரம் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் அதற்கான தேவை கிடையாது.ஏற்கனவே அங்கீகாரமற்ற மனைகள், வரன்முறை செய்யப்பட்டுள்ளது. சிலர் அங்கீகார அனுமதி எண் பெற்ற மனைப்பிரிவுகளில் உள்ள, மனை உரிமையாளர், உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறை செய்து கொண்டும் வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News