உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்படுமா?

Published On 2022-07-06 08:44 GMT   |   Update On 2022-07-06 08:44 GMT
  • கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் விளையாட்டு திறமை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனது.
  • ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவங்கும்.

திருப்பூர் :

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்கள் கற்றலில் இடைவெளி ஏற்பட்டது. இத்துடன் மாணவர்கள் தங்களின் விளையாட்டு திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனது. மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமை அவர்களுக்கு தெரிவதில்லை. தொடர் பயிற்சிகள், போட்டிகள் உள்ளிட்டவற்றின் மூலம், மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கல்வி மாவட்டத்தின் கீழ் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கு இடையே, குறுமை அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். தடகளப் போட்டிகள், கபடி, கோ-கோ, இறகுப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற அணிகள், மாணவர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவங்கும். நடப்பு கல்வி ஆண்டு, வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட்டு வரும் சூழலில், குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளை முன்கூட்டியே துவங்குவதுடன், மாணவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டியதும் அவசியம் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News