உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சுபாஷ் சந்திரபோஸ் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-09-27 07:44 GMT
  • ஜனவரி 23 ந்தேதி வழங்கப்படுவதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விருது பெற பரிசீலனைக்கான காலம் 1.7.2022 முதல் 31.8.2022 வரையென தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் :

சுபாஸ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது இந்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட உள்ளதென அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ம் ஆண்டிற்கு இவ்விருதைப் பெற தகுதியானவர்கள் அரசின் இணையதள முகவரியில் விண்ணப்பித்துபயன்பெறலாம்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையரக உள்த்துறை அமைச்சகம், பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செய்த சிறப்பான செயல்களை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஸ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்ற விருதை , ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ந்தேதி வழங்கப்படுவதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது, சுருள் மற்றும் மூன்று ரொக்க தொகை உடைய ரூ.51 லட்சம், ரூ.5 லட்சம் கொண்டது. மொத்தம் 3 விருதுகள் மட்டும். அனைத்தும் தனிநபராகவோ அல்லது அனைத்தும் நிறுவனமாகவோ அல்லது கூட்டாகவோ வழங்கப்படும். இவ்விருது பெற பரிசீலனைக்கான காலம் 1.7.2022 முதல் 31.8.2022 வரையென தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கு இணையவழி விண்ணப்பம் செய்வது தொடர்பான விரிவான செயல்முறைகள் darpg.gov.in. "https://awards.gov.in" என்ற இணையதள முகவரியில் கிடைக்கிறது. இவ்விருது குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் நன்கு விளம்பரப்படுத்துமாறும், அதிகளவில் இணையவழி விண்ணப்பங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பதிவு செய்வதை உறுதிப்படுத்துமாறும் அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியில் "https://awards.gov.in என்ற இணைப்பை பார்வையிட முன்னிலைப்படுத்தவும் , மாவட்ட உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் அனைத்து அரசு துறை அலுவலக அறிவிக்கை பலகைகளில் இவ்விருது குறித்த அரசு கடிதத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் 1.7.2022 முதல் 31.8.2022 வரையிலான காலத்தில் பேரிடர் மேலாண்மை துறையில் சிறப்பான செயல் புரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டு சுபாஸ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதை பெற "https://awards.gov.in" என்ற அரசின் இணையதள முகவரியில் நேரடியாக இணையவழி விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News