உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள். 

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-07-02 10:43 GMT   |   Update On 2022-07-02 10:43 GMT
  • சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
  • குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45-வது வார்டு காங்கேயம் ரோடு புளியமரத்தோட்டம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பலதரப்பட்ட கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறும்போது , நாங்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் . நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறிக்கொண்டு திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News