உள்ளூர் செய்திகள்

அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

Published On 2022-12-21 10:15 GMT   |   Update On 2022-12-21 10:15 GMT
  • பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்தல்

திருப்பத்தூர்:

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் அளித்துள்ளார் அதன் விவரம் வருமாறு:-

தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் சரி, திமுக தேர்தல் அறிக்கையிலும் சரி, சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைக் சென்ற இடங்களிலும் சரி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அதிக எதிர்பார்ப்பான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

ஆட்சிக்கு வநது 18 மாதங்கள் கடந்தும் இதுவரை அது பற்றின அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு பிறகு பஞ்சாப் அரசு கூட தனது மாநிலத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளது.

ஏன் தற்போது இமாச்சல பிரதேச அரசு பொறுப்பெற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தனது முதல் கூட்டத்திலேயே செயல்படுத்த அறிவித்துள்ளார்கள் தமிழக முதல்வர் அவர்களும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வருகிற ஜன-1 புத்தாண்டு தினத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஜூலை மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை இதுவரை வழங்காமல் இருப்பது அரசு ஊழியர்களின் மத்தியில் ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News