உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழா குழுவினர் மீது வழக்கு பதிவு

Published On 2023-04-01 08:45 GMT   |   Update On 2023-04-01 08:45 GMT
  • ஒருவர் பலியானதையடுத்து நடவடிக்கை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமம் சாமுண்டி வட்டத்தில் கடந்த 29-ந் தேதி 9-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

இந்த எருது விடும் விழாவில் காண வந்த பொது மக்கள் மற்றும் காளைகளை அடக்க முயன்ற 27 பேர் காயமடைந்தனர்.

மேலும் இதில் பாச்சல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி, சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவகுமார், அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், மற்றும் அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியைச் சேர்ந்த குசேலன் மகன் விக்ரம் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் அங்கிருந்து மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் விக்ரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்குபதிவு. இது சம்பந்தமாக அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஜோலார்பேட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு விழா குழுவினர் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News