உள்ளூர் செய்திகள்

அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் புத்தக திருவிழாவை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

இளம் தலைமுறையினர் புத்தகம் வாசிப்பது மிக, மிக அவசியம்- அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

Published On 2022-06-25 08:49 GMT   |   Update On 2022-06-25 08:49 GMT
  • இளம்தலைமுறைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுரை கூறியுள்ளார்.
  • புத்தகம் வசிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

தருமபுரி,

தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, இப்புத்தக திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமைவகித்தார். பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், ஆகியோர் முன்னிலை உரையாற்றினர்.

விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, புத்தகத் திருவிழாவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அவர் பேசிய தாவது:-

இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டும். சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம். மாணவப் பருவம் என்பது ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தப்பட வேண்டிய பருவமாகும். அவ்வாறு நல்வழிப்படுத்த கல்வி மட்டுமே சிறந்ததாக இருக்கும். அதற்கு புத்தகங்களை படிப்பது மிக மிக அவசியம். நவீன செல்போன்களும் சமூக ஊடகங்களும் சாதாரணமாகி உள்ள இன்றைய சூழலில் அவைகளுக்கு அடிமையாகி விடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது இன்றைய சூழலில் இளம் தலைமுறையினருக்கு மிக மிக அவசியமாகும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ ர் செல்வம்,தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு யசோதா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாது, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பரமேஷ்வரி, தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா உட்பட இன்னாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி கல்வி இயக்கக தருமபுரி மண்டல இணை இயக்குநர் ராமலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) தனலட்சுமி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள், தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன், பொருளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, பாரதி புத்தகாலயம் அறிவுடைநம்பி உட்பட குழு பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News