உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபர் பலி

Update: 2022-10-06 10:00 GMT
  • மொபட் அவினாசி ரோட்டில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
  • விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

கோவை

கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளத்தை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் கார்த்திக் (வயது 28). சம்பவத்தன்று இவர் தனது நண்பரான விருத்தாசலத்தை சேர்ந்த முகமது ரியாஸ் (22) என்பவரை தனது மொபட்டில் பின்னால் அமர வைத்து சென்றார்.

மொபட் அவினாசி ரோடு லட்சுமில்ஸ் சந்திப்பு அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போரடினர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

முகமது ரியாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.  

Tags:    

Similar News