உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கணவருக்கு அனுப்பி வாலிபர் மிரட்டல்

Update: 2022-07-04 11:18 GMT
  • இளம்பெண்ணின் வறுமையை பயன்படுத்தி அருணாச்சலம் அவரிடம் நெருங்கி பழகினார். குடும்பத்தை கவனித்து கொள்வதாக அன்பாக கூறினார். இதனால் இளம்பெண்ணும் அருணாச்சலத்துடன் நெருக்கமானார்.
  • இதனை பயன்படுத்திய அருணாச்சலம் ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

கொளத்தூர்:

கொளத்தூர், அண்ணா சிலை அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருபவர் அருணாச்சலம். இவரது சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும்.

இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன 28 வயது இளம்பெண் கடந்த ஒன்றரை வருடமாக வேலை செய்து வந்தார். இளம்பெண்ணின் கணவருக்கு சரியான வருமானம் இல்லாததால் அவரது குடும்ப செலவுகளை இளம்பெண்ணே தனது வேலைமூலம் கிடைக்கும் பணத்தில் சமாளிக்கும் நிலை இருந்தது.

இளம்பெண்ணின் வறுமையை பயன்படுத்தி அருணாச்சலம் அவரிடம் நெருங்கி பழகினார். குடும்பத்தை கவனித்து கொள்வதாக அன்பாக கூறினார். இதனால் இளம்பெண்ணும் அருணாச்சலத்துடன் நெருக்கமானார். இதனை பயன்படுத்திய அருணாச்சலம் ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அருணாச்சலத்தின் செக்ஸ் தொல்லை அதிகமானதால் அவரை விட்டு இளம்பெண் விலக தொடங்கினார். மேலும் அவர் வேலையை விட்டும் நின்று விட்டார்.

எனினும் அருணாச்சலம் தன்னுடன் நெருங்கி பழகவேண்டும் என்று இளம்பெண்ணை தனிமையில் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் தொல்லை தாங்கமுடியாத இளம்பெண், அருணாசலத்தை கண்டித்து தொடர்பு முழுவதையும் துண்டித்தார்.

இதனால் கோபம் அடைந்த அருணாசலம், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சிலருக்கு அனுப்பினார். மேலும் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அருணாசலம் மீது நடவடிக்கை எடுக்குமாறு வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அருணாச்சலத்தை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News