என் மலர்

  நீங்கள் தேடியது "Harassment case"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • பாலியல் தொல்லை குறித்து பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் பட்டினங்காத்தான் சேதுபதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜபருல்லாகான் (வயது 71). இவர் ராமநாதபுரம் பாரதிநகர் மீன்மார்க்கெட் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

  இவரது கிளினிக்கிற்கு பட்டினங்காத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சை பெற வந்து செல்வர். அதேபோல் கடந்த 2-ந் தேதி உடல் நலம் பாதித்திருந்த புதுவலசை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஜபருல்லாகானின் கிளினிக்கிற்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.

  அப்போது அந்த பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

  அதில் இளம்பெண்ணுக்கு டாக்டர் ஜபருல்லா கான் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4,562 சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்ததாக 4,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • 3,435 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  சென்னை:

  தமிழகத்தில் சமீபத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 39.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

  இதுதொடர்பான உண்மையான காரணத்தை அறிய மாநில குற்ற ஆவண காப்பகம், அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஜி.பி.க்கள் ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளது.

  தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019-ம் ஆண்டில் 4,139 வழக்குகளும், 2020-ம் ஆண்டில் 4,338 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

  அதேநேரத்தில் கடந்த ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 6,064 ஆக அதிகரித்துள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் 56 கொலைகள், 69 குழந்தைகள் இறப்பு ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

  16 சிறுவர்களை கொலை செய்ய முயன்ற வழக்குகளும், 8 சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்குகளும் பதிவாகி உள்ளன. சிறுவர்களை தாக்கி சிறிய காயம் ஏற்படுத்தியதாக 80 வழக்குகளும், கடுமையான காயம் ஏற்படுத்தியதாக 8 வழக்குகளும், 319 கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 47 சிறுமிகள் கடத்தி விற்கப்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

  4,562 சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்ததாக 4,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,435 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 128 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 வழக்குகள் சிறுவர் இல்லங்களின் பராமரிப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

  சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் 15 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடத்தியதாகவும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சென்னையில் 435 வழக்குகளும், கோவையில் 81 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

  சிறுமியர்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். அதன் காரணமாக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரவு நேரங்களில் சில மாணவிகளை வாலிபர்கள் அழைத்துச்சென்று அதிகாலையில் விடுவதாக வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அனுப்பப்பட்டது.
  • ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  பழனி:

  திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுதாராபுரம் ரோட்டில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்ளது. பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் படிக்கும் ஏழை மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி உள்ளனர்.

  கடந்த சில தினங்களாக விடுதியில் தங்கி உள்ள மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர்.

  இரவு நேரங்களில் சில மாணவிகளை வாலிபர்கள் அழைத்துச்சென்று அதிகாலையில் விடுவதாக வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு புகார் அனுப்பப்பட்டது.

  இதனைதொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி புகார் அளித்த மாணவிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு அவர்களது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

  இதனைதொடர்ந்து விடுதிவார்டன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். இதில் மாணவிகள் வாலிபர்களுடன் வெளியே சென்றுவந்தது உறுதியானது. இதனைதொடர்ந்து அவர்களை அழைத்துச்சென்ற கிருபாகரன், ராகுல், பரந்தாமன், 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

  இதில் 3 பேருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரியவந்தது. அவர்கள் மாணவிகளின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரவு நேரங்களில் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இச்சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 5 பேரும் இன்று பழனி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

  இதனிடையே பணியில் மெத்தனமாக இருந்த விடுதி வார்டன் அமுதா, வாட்ச்மேன் விஜயா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகம் உத்தரவிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திரும்பி வந்து அண்ணன் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
  • அப்போது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

  திருநின்றவூர்:

  ஆவடி அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியின் வீட்டிற்கு விளையாட சென்றார். அப்போது வீட்டில் தோழியின் உறவினரான கோவிந்தராஜ் (38) என்பவர் மட்டும் இருந்தார். அவர் சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பேச்சு கொடுத்தார். திடீரென அவர் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். உடனே கோவிந்த ராஜ், சிறுமியிடம் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்து வெளியில் அனுப்பி வைத்தார்.

  இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருமுல்லைவாயில் போலீசில் புகார் செய்தனர். போலீசார் என்ஜினீயரான கோவிந்த ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.

  வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ், கடந்த 3 மாதத்துக்கு முன்பு திரும்பி வந்து அண்ணன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
  • மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  புதுச்சேரி:

  புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெற்ற 2 மகளிடம் தந்தை ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தில் முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இதே போல் மற்றொரு சம்பவம் புதுவையில் நடந்துள்ளது. புதுவை முதலியார்பேட்டை போலீஸ் நிலைய எல்கைக்குட்டபட்ட பகுதியை சேர்ந்தவர் 45 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு 40 வயது மனைவி மற்றும் 12 வயது மகள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்த மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். இதனை அந்த மாணவியின் தந்தையான கட்டிட தொழிலாளி எட்டிப்பார்த்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாய் தனது கணவரிடம் கண்டித்துள்ளார். ஆனால் அவர் தவறை திருத்திக்கொள்ளவில்லை என தெரிகிறது.

  இதையடுத்து அந்த மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராணுவவீரர் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
  • சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராணுவ வீரரை கைது செய்தனர்.

  அம்மாபேட்டை:

  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (21). ராணுவவீரர். இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

  இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் பவானி அனைத்து மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்தனர்.

  இதையடுத்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராணுவவீரர் லோகேஷ் மீது தெரிவித்த புகார் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ராணுவ தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து ராணுவ வீரர் லோகேஷ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் லோகேஷை கைது செய்தனர்.

  பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போக்சோவில் ராணுவ வீரர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகனுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
  • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி:

  திருச்சியை அடுத்த திருவெறும்பூர் காட்டூர் சக்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங்மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  இந்த நிலையில் காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் பழுது நீக்க சென்றார் . அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது 39 வயது மனைவியும், பிளஸ்-1 படிக்கும் மகனும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

  இதில் மாணவனின் தாயாருக்கும், பழுது பார்க்க சென்ற சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்த அவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாரத்தில் 2, 3 நாட்கள் சரவணன் அந்த வீட்டிற்கு சென்று மாணவனின் தாயாரிடம் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வழக்கம்போல் சரவணன் மாணவன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அவரது தாயாரும் இருந்தார். அப்போது சரவணன் அந்த மாணவனின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் தொல்லை அளித்து உள்ளார். இந்த சம்பவத்துக்கு பின் அந்த மாணவன் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளானார்.

  இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அவனது தந்தை வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பினார். மகன் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருப்பதைக் கண்டு அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் விசாரித்த போது தாயின் உதவியுடன் சரவணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளான்.

  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மகனுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுக்கு தாயே உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தந்தையாக இருக்க வேண்டிய கார்த்திக், சிறுமி என்றும் பாராமல் மாணவிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
  • கட்டிட தொழிலாளி முருகானந்தம் என்பவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

  காரைக்குடி:

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 2016ம் ஆண்டு இறந்து விட்டார். இதன் காரணமாக இவரது தாயார் மகளுடன் சகோதரரின் பராமரிப்பில் இருந்தார்.

  இந்த நிலையில் மாணவியின் தாயாருக்கும், தனியார் பள்ளி வேன் டிரைவர் சுந்தர்ராஜ் என்ற கார்த்திக் (வயது 31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் வேன் டிரைவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

  தந்தையாக இருக்க வேண்டிய கார்த்திக், சிறுமி என்றும் பாராமல் மாணவிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகானந்தம் (31) என்பவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

  இந்த கொடூரம் 5 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்துள்ளது. மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் சொல்லாமல் தவித்து வந்துள்ளார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளர்.

  இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் கார்த்திகா, மனோகரி ஆகியோர் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாயின் 2-வது கணவர், கட்டிட தொழிலாளி முருகானந்தம் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

  இது தொடர்பாக மாணவியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திக், கட்டிட தொழிலாளி முருகானந்தம் ஆகியோரை கைது செய்தார்.

  மாணவி பல ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர்.
  • ரங்கநாதன் மீது பெண்ணை மானபங்கம்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  கோவை:

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி.

  இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அப்போது மாணவியின் பின் இருக்கையில் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கோட்டூர் திருவள்ளூவர் காலனியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 37) என்பவர் அமர்ந்து இருந்தார்.

  அவர் ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கநாதன் மாணவியிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

  இது குறித்து மாணவி கோட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரங்கநாதனை கைது செய்தனர்.

  அவர் மீது பெண்ணை மானபங்கம்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரங்கநாதனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பட்டாபிராமில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரான ராமுவை போலீசார் கைது செய்தனர்.
  • ராமு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  பூந்தமல்லி:

  திருவேற்காடு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 22-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய போது திருவேற்காடு செல்லியம்மன் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் 2 மனைவிகளின் கணவரான நந்தகுமார் (53) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

  மேலும் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி அங்கு எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு பின்னர் மாணவி வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை செய்தபோது டிரைவர் நந்தகுமார் வார்த்தை கூறி அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. தற்போது அவர் மீண்டும் மாணவியை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருப்பதும் தெரிந்தது.

  இதையடுத்து இந்த வழக்கு போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த நந்தகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நந்தக்குமாருக்கு 2 மனைவிகளும், 4 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  பட்டாபிராமில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரான ராமுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  குழித்துறை:

  குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, நாகர்கோவில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

  நான் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நர்சிங் படிப்பதற்காக விண்ணப்பித்து உள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தை மது அருந்தி விட்டு வந்து எனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்தார். இதனால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

  ஆனால் அவர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றதால் சிறிது காலம் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

  இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo