உள்ளூர் செய்திகள்

சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கு கீழ் குறைந்தது

Published On 2022-08-11 07:13 GMT   |   Update On 2022-08-11 07:13 GMT
  • சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்றைய நிலவரப்படி 3244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
  • அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 307 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. தற்போது கொரேனா பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் உள்ளது.

கடந்த 1-ந்தேதி நிலவரப்படி 1,359 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. தற்போது இது மேலும் வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய புள்ளி விவரப்படி தமிழகத்தில் 1000-க்கும் கீழ் நோய் பாதிப்பு குறைந்து இருக்கிறது.

927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் சென்னை நகரில் நோய் குறைந்து பரவல் வேகமாக சரிந்து உள்ளது.

கடந்த 1-ந் தேதி 309 ஆக இருந்த பாதிப்பு தற்போது 200-க்கும் கீழ் குறைந்து இருக்கிறது.

நேற்று 186 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நோய் பரவல் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

சென்னையில் கடந்த 1-ந் தேதி நோய் பாதிப்பு 309 பேர், 2-ந் தேதி 298 பேர், 3-ந் தேதி 283 பேர், 4-ந் தேதி 268 பேர், 5-ந் தேதி 247 பேர், 6-ந் தேதி 239 பேர், 7-ந் தேதி 234 பேர், 8-ந் தேதி 208 பேர், 9-ந் தேதி 202 பேர், 10-ந் தேதி 186 பேராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்றைய நிலவரப்படி 3244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 307 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மற்ற மண்ட லங்களில் சிகிச்சையில் இருப்பவர்கள் விவரம் வருமாறு:-

திருவொற்றியூர்-145

மணலி-138

மாதவரம்-170

தண்டையார்பேட்டை-168

ராயபுரம்-181

திரு.வி.க.நகர்-214

அம்பத்தூர்-207

அண்ணநகர்-230

தேனாம்பேட்டை-293

கோடம்பாக்கம்-260

வளசரவாக்கம்-228

ஆலந்தூர்-214

அடையாறு-307

பெருங்குடி-255

சோழிங்கநல்லூர்-227.

Tags:    

Similar News