உள்ளூர் செய்திகள்

அறிவியல் செயல் திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டிய போது எடுத்தபடம்.

மாநில அளவிலான செயல் திட்டப் போட்டியில் பாரத் பள்ளிக்கு சிறப்பு பரிசு

Published On 2022-09-21 09:01 GMT   |   Update On 2022-09-21 09:01 GMT
  • நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு ‘இன்னோவேட் 2022’ மாநில அளவிலான அறிவியல் செயல்திட்டப் போட்டி நடைபெற்றது
  • அறிவியல் செயல் திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

தென்காசி:

நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு 'இன்னோவேட் 2022' மாநில அளவிலான அறிவியல் செயல்திட்டப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவர்கள் சாய்ராம், முகம்மது முஸ்ஸமில், ஆல்ரின் டெரால் ஆகியோர் ரெயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் பொழுது விபத்து ஏற்படுவதனால் அவற்றைத் தடுக்கும் வண்ணமாக அறிவியல் செயல்திட்ட மாதிரியை வடிவமைத்திருந்தினர். இச்செயல் திட்டத்திற்கு சிறப்புப் பரிசு கிடைத்தது.

அறிவியல் செயல் திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News