உள்ளூர் செய்திகள்

தசரா பண்டிகையை முன்னிட்டு பாளை ராமசாமி திடலில் 12 சப்பரங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.

தசரா விழாவையொட்டி பாளையில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம் - கோவில்கள் முன்பு சப்பரங்கள் அணிவகுப்பு

Published On 2022-10-06 09:11 GMT   |   Update On 2022-10-06 09:11 GMT
  • நெல்லை மாவட்டத்தில் பாளையில் 12 சப்பரங்களுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.
  • தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.

நெல்லை:

தென் மாவட்டங்களில் நவராத்திரியையொட்டி தசரா விழா மிக கோலா கலமாக கொண்டாடப்படும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளையில் 12 சப்பரங்களுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.

தசரா பண்டிகை

இந்த ஆண்டு தசரா விழா கடந்த 25-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினந்தோறும் பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து பாளையில் உள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வ கர்மா உச்சினிமாகாளி, புதுப் பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார் பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்களில் தசரா பண்டிகை தொடங்கியது.

தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது. 10-ம் திருநாளான நேற்று இரவு பாளை பகுதியில் உள்ள அம்மன் கோவில்கள், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்களில் இருந்து மின்னொளியில் 12 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரதவீதிகளில் வலம் வந்தன.

இன்று காலையில் பாளை ராமசாமி கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிைறவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை, பழ வகைகள் வைத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

சூரசம்ஹாரம்

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு ராஜகோ பாலசுவாமி கோவில் முன்பு சப்பரங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு மார்க்கெட் பகுதியிலும், நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பும் சப்பரங்கள் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்க உள்ளது.

இதேபோல் நெல்லை மாநகரில் அமை ந்துள்ள அம்மன் கோவில் களில் இருந்து 34 அம்மன் சப்பரங்கள் ரதவீதிகளில் வலம் வந்தன. இதனையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக் கையாக சப்பர பவனி வரும் பாதைகள் முழுவதில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News