உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இதுவரை 58,211 விவசாயிகளுக்கு ரூ.333.56 கோடி வட்டியில்லாத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் கார்மேகம் தகவல்

Published On 2022-10-05 10:35 GMT   |   Update On 2022-10-05 10:35 GMT
  • கே.சி.சி. திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு ஜாமீன் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், பிணையத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரையிலும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மேலும் கால்நடை பராமரிப்பு கடனாக 18,083 நபர்களுக்கு ரூ73.24 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் செப்டம்பர் 2022 முடிய 40,128 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.260.32 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு கடனாக 18,083 நபர்களுக்கு ரூ73.24 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 58,211 விவசாயிகளுக்கு ரூ.333.56 கோடி வட்டியில்லாத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கே.சி.சி. திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு ஜாமீன் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், பிணையத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரையிலும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்பு கடனாக கறவை மாடு ஒன்று பராமரிக்க ரூ.14 ஆயிரமும், அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மேற்கண்ட இரண்டு திட்டத்திலும் வட்டியில்லாமல் கடன் வழங்கி அயத வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்தி வருவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மேலும், தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன் உள்ளிட்ட அனைத்து

வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக

வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்

உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்த்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான

கடன்களையும் பெற்று பயனடையலாம். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம். இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News