உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 232 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-09-10 11:39 GMT   |   Update On 2023-09-10 11:39 GMT
  • கும்பகோணம் நீதிம ன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
  • மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் ஆணைப்படி, செயலாளரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான சண்முகப்பிரியா ஆகியோ ர்களின் அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்சி வசக்திவேல்கண்ணன் தலைமையில், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்க ள்மோகன்ராஜ், சசிகலா மற்றும் இரண்டாவது அமர்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு தலைமையில், வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்க ள்செந்தில்குமார், மங்களம்,

அதேபோல் திருவிடை மருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் மதவன், பூமொழி ஆகியோரது பங்கேற்பில் மொத்தம் 1948 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 232 வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.

அதில் 3 காசோலை மோசடி வழக்கில் மூலம் ரூ. 16,49,841, 24 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.92,83,000, 44 கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ.70,91,000, 189 சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.18,52,300/-இதர 1 வழக்குகள் மூலம் ரூ.1,94,000 என 232 வழக்குகள் மூலம் மொத்தம் ரூ.1,11,26,841 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை உதவியாளர்ராஜேஷ்குமார், தன்னார்வ சட்ட பணியா ளர்கள்ரா ஜேந்திரன், பாஸ்கரன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News