உள்ளூர் செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த குழந்தைகள்.

சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகள் தர்ணா

Published On 2022-08-08 10:05 GMT   |   Update On 2022-08-08 10:05 GMT
  • சேலம் தேக்கம்பட்டி வட்டக்காடு பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
  • அப்போது பள்ளி குழந்தைகள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என கோஷம் எழுப்பியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சேலம்:

சேலம் தேக்கம்பட்டி வட்டக்காடு பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பள்ளி குழந்தைகள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. ஆட்சியில் சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தேக்கம்பட்டி பஞ்சாயத்தில் 2 முறை பராமரிப்பு பணிகள் செய்தும் சாலை அமைத்து தரவில்லை.

இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த முறையாவது சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News