உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

உடுமலையில் மண்வளம் காப்போம் இயக்க ஆலோசனை கூட்டம்

Published On 2022-06-10 07:33 GMT   |   Update On 2022-06-10 07:33 GMT
  • ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் வரவேற்று இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.
  • 80 நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

உடுமலை,

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சார்பில் தமிழகம் முழுவதும் மண்வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சத்குரு 100 நாட்களில் 25 நாடுகளுக்கு பைக் வாயிலாக 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். அந்த பயணம் வரும் 21 ல் நிறைவுபெறுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த உடுமலையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் மண் காப்போம் இயக்கம் சார்பில் உடுமலை ஐஎம்ஏ.ஹாலில் நடந்தது.

ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் வரவேற்று இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர். மண் வளம் குறைந்ததால் இந்த தலைமுறை குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதித்துள்ளனர் மண்வளத்தை பாதுகாக்க விட்டால் எதிர்காலம் பிரச்சினை உள்ளாகும்.

வரும் 25 ஆண்டுகளில் உணவு உற்பத்தி குறையும்போது மக்கள் தொகை இன்னும் அதிகரித்திருக்கும். எனவே இது சார்ந்த உலகளாவிய சட்டம் திட்டம் கொள்கையைக் கொண்டு வருவதே மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமாகும்.

இதற்கு 80 நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. மண் வளத்தைப் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதே அவர்களுக்கு நாம் தரும் பரிசு.

மண்ணின் கரிம வளத்தை வெறும் ஒரு சதவீதம் அதிகரித்தால் ஏக்கருக்கு 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கூடுதலாக சேமிக்கலாம். தமிழக மண்ணின் சராசரி கரிமவளம்0.68 சதவீதமாக உள்ளது. இதை 8 முதல் 10 சதவீதமாக அதிகரித்தால் விவசாயத்திற்கான தண்ணீர் பயன்பாட்டை 70 சதவீதம் குறைக்க முடியும். இதற்கு மக்களின் குறிப்பாக விவசாயிகளின் ஆதரவு தேவையாகும் .இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். மழை உடுமலை, அபெக்ஸ் சங்கம், ராயல் அரிமா சங்கம், கிழக்கு அரிமா சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வரும் ஜூன் 18ல் விடுமுறையில் மண்வளப் பாதுகாப்பு குறித்த பெரிய அளவிலான கருத்தரங்கம் நடத்த தீர்மானிக்கப்பட்டது .சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு பேசிய உரை காணொளியில் திரையிடப்பட்டது.

Tags:    

Similar News