உள்ளூர் செய்திகள்

மக்கள் சங்கம் மாநாடையொட்டி நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்,

மக்கள் சங்கமம் மாநாடு

Published On 2022-07-19 08:14 GMT   |   Update On 2022-07-19 08:14 GMT
  • ராமநாதபுரத்தில் மக்கள் சங்கமம் மாநாடு நடந்தது.
  • அதன்படி பனைக்குளம் மேற்கு பஸ் நிறுத்தம் காயிதே மில்லத் திடலில் மக்கள் சங்கமம் மாநாடு கண்காட்சி நடந்தது.

ராமநாதபுரம்

நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் மக்களாட்சியை பாதுகாப்போம் மக்கள் சங்கமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பனைக்குளம் மேற்கு பஸ் நிறுத்தம் காயிதே மில்லத் திடலில் மக்கள் சங்கமம் மாநாடு கண்காட்சி நடந்தது.

பாப்புலர் ப்ரண்ட் கொடியை மாவட்ட செயலாளர் சேக்தாவூது ஏற்றினார், கண்காட்சியை ஊராட்சிமன்ற தலைவி பௌசியாபானு திறந்து வைத்தார்.

இந்த மாநாட்டிற்கு மாநாட்டு குழு தலைவர் முஹம்மது அப்துல் ரஹிம் தலைமை தாங்கினார். நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவி சுமையா நஸ்ரின் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அஹமது ஆகியோர் பேசினர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது இபுராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டது, இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதுவலசை தலைவர் ரியாஸ்தீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News