உள்ளூர் செய்திகள்

அம்மிக்கல்லில் மசாலா அரைக்கும் பெண்கள்.

உணவுக்கு ருசி சேர்க்கும் அம்மிக்கல் மசாலா

Published On 2022-08-04 08:32 GMT   |   Update On 2022-08-04 08:32 GMT
  • ராமநாதபுரம் பகுதியில் பெண்கள் அம்மிக்கல்லில் மசாலா அரைத்து சமையல் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
  • விசேஷ நிகழ்ச்சிகளுக்கு உணவுகளுக்கு அம்மிக்கல் மசாலாவை சமையல் மாஸ்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

பல தலைமுறைகளாக தமிழகத்தில் வீடுகள் தோறும் அம்மிக்கல் வைத்து மசாலா பொருட்களை பெண்கள் அரைத்து சமையல் செய்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மின்சாதன பொருட்கள் சந்தையை ஆக்கிரமிப்பு செய்தது. இதன் காரணமாக மசாலாக்களை மிக்சியில் தயார் செய்தனர். மேலும் பலர் ரெடிமேட் மசாலாக்களை விரும்பி தேர்வு செய்தனர்.

இதில் மோகம் கொண்ட பெண்கள் அம்மிக்கல் பக்கம் செல்வதை தவிர்த்து விட்டனர். இதன் காரணமாக அம்மிக்கல் பயன்பாடு வெகுவாக குறைந்தது. அம்மிக்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

ரெடிமேட் மசாலாக்களை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளில் ருசி குறைந்தும் அதைப் பற்றி கவலைப்படாமல் வீடுகளில் உணவு தயாரித்து வந்தனர்.

இன்றும் பெரும்பாலான கிராமங்களில் வீடுகளில் அம்மிக்கல் பயன்பாடு இருந்து வருவது வியப்பு அளிக்கிறது.

நகரங்களில் உணவு தயாரிப்பில் வழிமுறைகள் மாறினாலும் கிராமங்களில் பெண்கள் அம்மிக்கல்லில் மசாலா அரைத்து உணவு தயாரித்து வருவது தொடர்கிறது.

இது தவிர வீடுகளில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு உணவுகளுக்கு அம்மிக்கல் மசாலாவை சமையல் மாஸ்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த உணவு நாவில் எச்சில் ஊற வைக்கிறது. இதற்கென மசாலா அரைத்து கொடுக்க பெண்கள் உள்ளனர்.

இது குறித்து சமையல் மாஸ்டர்கள் கூறுகையில், சில மணி நேரங்களில் மசாலாவை அரைத்துக் கொடுக்கக்கூடிய வகையில் மின்சாதன எந்திரங்கள் இருந்த நிலையிலும் அதை பயன்படுத்துவது கிடையாது. அம்மிக்கல்லில் அரைக்கப்படும் மசாலாக்கள் தனித்தன்மை வாய்ந்தது. இது உணவில் கூடுதலாக ருசியை அளித்து வருகிறது. இந்த ருசி ரெடிமேட் மசாலாகளில் இருப்பது இல்லை.

ஆகவே கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் விசேஷ காலங்களில் அம்மிக்கல் மசாலாவை தேர்வு செய்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News