உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-08-07 10:12 GMT   |   Update On 2022-08-07 10:12 GMT
  • கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டபடியால் அதனுடைய மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.
  • வெள்ள பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்களான கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டபடியால் அதனுடைய மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.

இதனால் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட சில கிராம குடியிருப்புகளுக்கும், திருவிடைமருதூர், ஆடுதுறை, சோழபுரம், திருபுவனம் மற்றும் வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வெள்ள பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News