உள்ளூர் செய்திகள்

வடக்கு ரத வீதியில் தண்ணீர் தேங்கிய இடத்தில் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்திய காட்சி

நெல்லை டவுன் வடக்கு ரத வீதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு -மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

Published On 2022-11-10 09:51 GMT   |   Update On 2022-11-10 09:51 GMT
  • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
  • தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த ரத வீதியில் லேசான சாரல் மழை பெய்தாலே குளம் போல தண்ணீர் தேங்கி கிடக்கும். இதனால் அந்த பகுதியில் சாலையோர கடை வைத்திருப்பவர்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணும் படி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ரா மனிடம் அறிவுறுத்தினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான பணியாளர்கள் இன்று வடக்கு ரத வீதியில் தேங்கி கிடந்த மழைநீரை மாநகராட்சி லாரியை கொண்டு மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி யில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் தேங்கி கிடந்த மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அந்த நீரில் மருந்து தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News