உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் ஜவுளி, நகை கடைகளில் மக்கள் குவிந்தனர்

Published On 2023-01-13 07:26 GMT   |   Update On 2023-01-13 07:26 GMT
  • புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
  • நாமக்கல்லில் கடைவீதிகளில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடை களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

நாமக்கல்:

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

குறிப்பாக நாமக்கல்லில் கடைவீதிகளில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடை களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலானோர் தங்க ளது குடும்பத்தினருடன் வந்து புத்தம் புதிய டிசைன்க ளில் தங்களுக்கு தேவையான பிடித்தமான துணிகளை தேர்வு செய்தனர். இதே போல நகைக்கடைகளிலும் குடும்பத்துடன் வந்த பெண்கள் புதிய டிசைன்களில் நகைகளை தேர்வு செய்து அணிவித்து மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகையை யொட்டி பூஜைக்கு படைக்க தேவையான காய்கறிகளை வாங்க, இன்றே நாமக்கல்லில் காய்கறி சந்தைகளிலும் மற்றும் உழவர் சந்தைகளிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் காய்கறி விற்பனையும் சூடு பிடித்தது.

மேலும் மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பல வண்ணங்களில் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கிலி, ஜங்குபட்டை, வண்ணபூச்சிகள், வாய் பூட்டு, சாட்டை ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனையும் ஏராளமான விவசாயிகள் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அழகு படுத்துவதற்காக வாங்கி சென்றனர்.

நாமக்கல் மாவட்ட புறநகர் பகுதிகளான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோக னூர் உள்பட பல பகுதி களிலும் பொங்கல் பண்டி

கையொட்டி ஜவுளிக்கடை கள், நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Tags:    

Similar News