உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் செய்த பொது மக்களை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2022-09-06 08:24 GMT   |   Update On 2022-09-06 08:24 GMT
  • மேல்மலையனூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  • வேலூர் செல்லும் அரசு பஸ்கள் (தடம் எண் 216) மட்டும் நிற்காமல் செல்கின்றன.

விழுப்புரம்:

மேல்மலையனூர் அருகே அன்னமங்கலம் கிராமம் உள்ளது. இது விழுப்புரம் -ஆற்காடு சாலையிலிருந்து சுமார் 3 கி.மீ உட்புறம் உள்ளது. இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் அன்னமங்கலத்தைச் சுற்றி 10 - க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கூட்டு சாலையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் விழுப்புரம்-வேலூர் செல்லும் அரசு பஸ்கள் (தடம் எண் 216) மட்டும் நிற்காமல் செல்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அன்னமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் விழுப்புரம் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் அன்னமங்கலத்தில் இறங்க டிக்கெட் கேட்டால் நீலாம்பூண்டி அல்லது வளத்தியில்தான் பஸ் நிற்கும் என்று கூறிவிடுகின்றனர். ஆகையால் நாங்கள் சரியான நேரத்தில் எங்கும் செல்ல முடிவதில்லை. ஆகையால்தான் மறியலில் ஈடுபட்டுள்ளோம். என்றனர். இது குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சம்ப ந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News