உள்ளூர் செய்திகள்

இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற காட்சி.


பரமன்குறிச்சி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-16 09:21 GMT   |   Update On 2022-07-16 09:30 GMT
  • பரமன்குறிச்சி செல்வவிநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
  • விழாவையொட்டி மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனலட்சுமி பூஜை, கோபூஜை, தீபாராதனை நடந்தது.

உடன்குடி:

பரமன்குறிச்சி இசக்கியம்மன் கோவில் தெரு செல்வவிநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி கடந்த 14 -ந்தேதி காலை 5 மணிக்கு மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனலட்சுமி பூஜை, கோபூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சுவாமி யாகசாலை பிரவேசம், யாகபூஜை, பூர்ணாகுதி நடந்தது.

15-ந்தேதி காலை 6 மணிக்கு கும்ப பூஜை, வேள்வி, ஸ்ரீபரிஷாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 10 மணிக்கு விமான கும்பாபிஷேகம், பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் கிருஷ்ண குமார், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், நிர்வாகிகள் மனோஜ், செந்தில், கர்ணன், ராமன், தங்கராஜ் உட்பட திரளான ஊர்மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News