உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-07-06 10:22 GMT   |   Update On 2022-07-06 10:22 GMT
  • வட்டாட்சியர் வளாகம் முழுவதும் காலியிடங்களில் புதர் மண்டி கிடக்கிறது.
  • பத்தடி உயரத்துக்கு வளர்ந்து புதர் போல் உள்ளதால் கழிப்பிட பகுதி, மக்கள் செல்ல முடியாமல் மிகவும் அச்சமூட்டும் வகையில் உள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி,

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பொம்மிடி, பையர் நத்தம், ரேகட ஹள்ளி, சித்தேரி, கடத்தூர் என தங்கள் தேவைகளான பட்டா திருத்தம், நில திருத்தம், சொத்து சம்பந்தமான விஷயங்கள், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், ஆதார் திருத்தம் என பல்வேறு தேவைக்காக வந்து செல்கின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்திற்குள்ளும், அலுவலகங்களுக்கு வெளியிலும் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகளும் இல்லை, இதனால் மக்கள் கணினி மையத்தில் முன்பு நீண்ட கியூ வரிசையில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றார்கள்.

கைக்குழந்தையுடனும் வரும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தரையில் அமர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் அவலமும் நடக்கின்றது. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதி என எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல வட்டாட்சியர் வளாகம் முழுவதும் காலியிடங்களில் புதர் மண்டி கிடக்கிறது, விஷ செடிகளும் ,செடி,கொடிகளும் பத்தடி உயரத்துக்கு வளர்ந்து புதர் போல் உள்ளதால் கழிப்பிட பகுதி, மக்கள் செல்ல முடியாமல் மிகவும் அச்சமூட்டும் வகையில் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக சுற்றுப்பகுதியில் கொட்டி கிடக்கிறது, இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் சுகாதாரமற்ற குப்பை கிடங்காகவே காட்சி அளிக்கிறது.

எனவே வட்டாட்சியர் வளாகப் பகுதியை சுத்தப்படுத்தி பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News