உள்ளூர் செய்திகள்

கடையம் பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக , தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்த காட்சி.


ராமநதி அணை சாலையை சீரமைக்க வேண்டும்- பஞ்சாயத்து கூட்டமைப்பு கோரிக்கை

Published On 2022-06-26 08:28 GMT   |   Update On 2022-06-26 08:28 GMT
  • ராமநதி அணை பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • ஆற்றங்கரையோரம் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக, அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கடையம் பஸ் நிலைய பகுதியிலிருந்து ராமநதி அணை பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இச்சாலையின் வழியே நித்திய கல்யாணி அம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் விவசாய வயல் பகுதிகளுக்கு இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இச்சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடையம் யூனியன் கூட்ட அரங்கு நவீன குளிரூட்டப்பட்ட வசதியுடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றங்கரையோரம் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது ஊராட்சி தலைவர்கள் அழகுதுரை, மதியழகன், செண்பகவல்லி ஜெகநாதன், முகைதீன் பீவி, கணேசன், மலர்மதி, ஜின்னத் பிர்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News