உள்ளூர் செய்திகள்

அம்மன் பவனி வந்த காட்சி.

செங்கோட்டை அருகே முப்புடாதி அம்மன் கோவில் சப்பர வீதிஉலா

Published On 2022-10-07 08:06 GMT   |   Update On 2022-10-07 08:06 GMT
  • செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு முப்புடாதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
  • கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை ஆரியநல்லுார் தெருவில் யாதவா் (கரையாளா்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில் முப்புடாதி அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருவிழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் முப்புடாதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சப்பரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. இதனைதொடா்ந்து அம்மனுக்கு வண்ண மலா்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Tags:    

Similar News