உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த மனுவை அதிகாரியிடம் வழங்கிய உறுப்பினர்கள்.

பாளையங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்

Update: 2022-06-28 06:03 GMT
  • அலுவலக பணிகளை கவனிப்பதில்லை. வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை. துணைத்தலைவர் பதவி ஆள் மாறாட்டம் செய்ய–ப்பட்டு வருகிறது என புகார்
  • துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அழகுமலை. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தெய்வலட்சுமி உள்ளார்.

மொத்தமுள்ள 9-வார்டு உறுப்பினர்களில், 6 உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.

ஊராட்சிமன்றத் துணைத் தலைவரான தெய்வலட்சுமி அலுவலகத்திற்கு வரு–வது இல்லை. அலுவ–லக பணிகளை கவனிப்ப–தில்லை. வார்டு உறுப்பின–ர்களை மதிப்பதில்லை.

அனைத்து பணிகளிலும் அவரது கணவர் முனியாண்டி தலையீடு செய்கிறார். இந்த ஊராட்சி துணைத்தலைவர் பதவி ஆள் மாறாட்டம் செய்ய–ப்பட்டு வருகிறது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி, சீனியம்மாள், முனிசெல்வம், அழகுமலை, கலைராணி, அனுசியா ஆகிய 6 உறுப்பினர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பின்னர் திண்டுக்கல் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் ஆகியோரிடம் துணைத்தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோரி–க்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News