உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழா

சடையாண்டி கோவில் திருவிழா

Published On 2022-06-11 10:35 GMT   |   Update On 2022-06-11 10:35 GMT
  • மதுரை மாவட்டம் தாதம்பட்டியில் சடையாண்டி கோவில் திருவிழா நடந்தது.
  • கிராம மக்கள் கிடாவெட்டி பொங்கல்வைத்து வழிபாடு செய்தனர்.

மதுரை

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டியில் சடையாண்டிகோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலை நையாண்டிமேளத்துடன் திருவிழாதொடங்கி இரவில் பூசாரிஅழைப்பு நடந்தது.

பின்னர் ராணி மங்கம்மாள் சத்திரம் முன்பு கரகம் ஜோடித்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தது. பெண்கள் விநாயகர், அம்மன், மீனாட்சி, கருப்புசாமி உள்ளிட்ட சாமிவேடத்துடன் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள் எடுத்து வந்து கும்மிபாடல்பாடி கோவிலில் வைத்தனர்.

மாவிளக்கு எடுத்துநேர்த்திகடன் செலுத்தினர். பூசாரி பொங்கல் வைத்தலுக்கு பின் கிராம மக்கள் கிடாவெட்டி பொங்கல்வைத்து வழிபாடு செய்தனர். 2-ம் நாள் இரவு கோவில் முன்பு முளைப்பாரி வைத்து கும்மிபாடல்பாடி வழிபாடுசெய்து பொங்கல் பிரசாதம் வழங்கினர்.

3-ம் நாள் காலை கோவிலில் இருந்து பூசாரி கரகத்துடன் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோவில் பின்புறம் உள்ள ஓட்டார்குளத்தில் கரைக்கப்பட்டது.

Tags:    

Similar News