உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர்.

பெண் உள்பட 3 பேர் தர்ணா போராட்டம்

Published On 2022-06-13 10:07 GMT   |   Update On 2022-06-13 10:07 GMT
  • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 3 பேர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
  • கணவரை அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பெண் உள்பட 3 பேர் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சுடும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தர்ணாவில் ஈடுபட்ட மகாலட்சுமி என்பவர் கூறுகையில், "நான் குளிக்கும்போது அருள் பாண்டி என்பவர் எட்டிப்பார்த்தார்.

இதுதொடர்பாக நான் கணவரிடம் தெரிவித்தேன். எனவே அவர் அந்த வாலிபரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள் பாண்டி மற்றும் அவரது தந்தை முருகன் ஆகிய 2 பேரும், என் கணவரை சரமாரியாக வெட்டினார்கள்.

இதையடுத்து நாங்கள் கணவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளோம். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

இதற்கிடையே "என் கணவரை வெட்டிய குற்றவா ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, எம்.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு தரப்பட்டது. இருந்த போதிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்து உள்ளோம்" என்று தெரிவித்து உள்ளார்.

இருந்தபோதிலும் போலீசார் அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News