உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனங்கள் ஜவஹர் பஜாருக்குள் நுழைய தடை விதிக்க கோரிக்கை

Published On 2022-10-06 06:34 GMT   |   Update On 2022-10-06 06:34 GMT
  • சரக்கு வாகனங்கள் ஜவஹர் பஜாருக்குள் நுழைய தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • நெரிசல் மிகுந்த நேரங்களில்

கரூர்:

கரூர், பழைய திண் டுக்கல் சாலையில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட் டியுள்ளனர்.

கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து பழைய திண்டுக்கல் சாலை வழியாக ஜவஹர் பஜார் செல்லும் சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில், சாலை ஓரங்களில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். அந்த சமயத்தில், வணிக நிறுவ னங்களின் முன்னால் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பொருட்களை ஏற்றி, இறக்குகின்றனர்.

இதனால் நெரிசல் ஏற் பட்டு, சாலையில் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், போலீசாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திணறுகின்றனர். எனவே, நெரிசல் மிகுந்த நேரங்களில் சரக்கு வாகனங்கள், ஜவஹர் பஜார் பகுதிக்குள் வர தடை விதிக்க வேண்டும். மேலும்,

போக்குவரத்து போலீ சாரும் முழு நேரம் பணி யமர்த்தப்பட்டு, போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என ஓட்டிகள் வாகன கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News