உள்ளூர் செய்திகள்

ஜவஹர் பஜார் பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-08-29 09:23 GMT   |   Update On 2022-08-29 10:28 GMT
  • ஜவஹர் பஜார் பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
  • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கரூர்:

கரூர் நகரின் மைய பகுதியான ஜவஹர் பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், தலைமை தபால் அலுவலகம், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பொருட்களை பொதுமக்கள் வாங்க இப்பகுதிக்கு வருகின்றனர்.

பெரும்பாலும் இரு சக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள், வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலால் அவசர காலத்தில் புறப்பட்டு செல்லும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கிறது. எனவே கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News