உள்ளூர் செய்திகள்

8 வார காலம் அவகாசம் இருந்தும் கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தும் போலீசார் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

Published On 2023-09-29 09:33 GMT   |   Update On 2023-09-29 09:33 GMT
  • குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது
  • 10 டயர் மேல் உள்ள டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது

நாகர்கோவில் : குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 10 டயர் மேல் உள்ள டிப்பர் லாரிகள் இயக்கக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும் கனிமவளங்களை கொண்டு செல்வதற்கும் இரண்டு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து குமரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து 8 வார காலம் 10 டயருக்கு மேற்பட்ட டிப்பர் லாரி களை இயக்கலாம் என அவகாசம் வழங்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு வந்தனர்.

ஒழுகினசேரி பகுதி யில் போலீசார் 10 சக்கரத்திற்கு மேல் உள்ள டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரிகளை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் டேவிட் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் லாரிகளை திருப்பி அனுப்பு வது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சங்கத்தின் தலைவர் டேவிட் ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவின் மதுரை கோர்ட்டின் 8 வார காலம் அவகாசம் ஆகியவற்றிற்கான தீர்ப்பின் நகலையும் வழங்கி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News