உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-09-02 11:29 GMT   |   Update On 2022-09-02 11:29 GMT
  • மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.மணல் ஆலையில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது.
  • இனி ஒரு உயிர் பலி ஏற்படாமல் தடுக்கும் வகையில் அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா ,மீன்வளத்துறை அதிகாரி காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து மீனவர்கள் கூறுகையில்:

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.மணல் ஆலையில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது. மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகே அனுமதிவழங்க வேண்டும்.

தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் உள்ள முகத்து துவாரத்தில் உள்ள மணல் திட்டினால் அடிக்கடி மீனவர்கள் பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது . இனி ஒரு உயிர் பலி ஏற்படாமல் தடுக்கும் வகையில் அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தேங்காய்பட்டிணம் துறைமுகம் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் முட்டம், குளச்சல் துறைமுகத்தில் கரை சேர வேண்டிய நிலை ஏற்படும். எனவே அந்த மீன்களை தேங்காய்பட்டிணம் துறைமுகப்பகுதிக்கு கொண்டு வந்த விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

இதற்கு ஒரு சில மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News