உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே சேதமடைந்த நிலையில் பாசன வாய்க்கால்கள்- சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-09-22 07:48 GMT   |   Update On 2022-09-22 07:48 GMT
  • கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி கிராமத்திற்கு மேற்புறமுள்ள அடைச்சாணி பெரிய குளத்திலிருந்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
  • மழைகாலங்களில் குளம் நிரம்பினால் குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மூன்று மடைகளின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால்களில் சென்று விவசாய நிலங்களுக்கு பாயும்.

கடையம்:

கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி கிராமத்திற்கு மேற்புறமுள்ள அடைச்சாணி பெரிய குளத்திலிருந்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் மழைகாலங்களில் குளம் நிரம்பினால் குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மூன்று மடைகளின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால்களில் சென்று விவசாய நிலங்களுக்கு பாயும். இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் கற்களால் கட்டப்பட்டிருந்த வாய்க்கால்களின் நீரோடைகள் அனைத்தும் சிதிலமடைந்து இடிந்த நிலையில் காணப்படுகிறது.


இதனால் சிதிலமடைந்த நீரோடைகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் அதிகளவில் வீணாக செல்வதால் அப்பகுதியில் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடைச்சாணி குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால் நீரோடைகளில் சுற்றுச்சுவர்கள் அனைத்தையும் புதுப்பித்து சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அடைச்சாணி குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களை சேர்ந்த அடைச்சாணி, மலையான்குளம், மயிலப்பபுரம், துப்பாக்குடி, இடைகால், புதுக்குடி பகுதியின் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மழைக்காலங்கள் வருவதற்குள் நீரோ டைகளின் சுற்றுச்சுவர்கள் அனைத்தையும் அரசு சீரமைத்து கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

Similar News