உள்ளூர் செய்திகள்

விளார் ஊராட்சியில் உலக பெண் குழந்தைகள் தின விழாவில் கையேடு வெளியிடப்பட்டது.  

விளார் ஊராட்சியில் உலக பெண் குழந்தைகள் தின விழா

Published On 2022-10-12 09:53 GMT   |   Update On 2022-10-12 09:53 GMT
  • விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவி மைதிலி ரத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
  • செட் இண்டியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர் ஞானராஜ் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த விளார் ஊராட்சியில் உலக பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. செட் இண்டியா மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை சார்பில் நடந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவி மைதிலி ரத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

விழாவில் செட் இண்டியா இயக்குனர் பாத்திமாராஜ், வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக போசிரியர் ஆனந்த்ஜெரார்டு ஜெபஸ்டின், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தனபால், செட் இண்டியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பேராசிரியர் ஞானராஜ் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாணவி ரம்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News