உள்ளூர் செய்திகள்

சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

மரக்காவலசை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-07-21 09:20 GMT   |   Update On 2022-07-21 09:34 GMT
  • மக்கள் அதிகம் கூடும் மல்லிபட்டினம் கடற்கரை சாலையில் ஜல்லி மட்டும் கொட்டப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
  • ஐஸ்வாடி பகுதி மீனவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் பூக்கொல்லையில் உள்ள உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

சரபேந்திரராஜன்பட்டினம் மீனவராஜன்: ஆடி அமாவாசை தினத்தில் மக்கள் அதிகம் கூடும் மல்லிபட்டினம் கடற்கரை சாலையில் ஜல்லி மட்டும் கொட்டப்பட்டு உள்ளது. உடனடியாக சாலை பணியை முடித்து தர வேண்டும். மரக்காவலசை சாகுல்ஹமீது: மரக்காவ–லசை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

ஆணையர் கிருஷ்ண–மூர்த்தி: சாலை பணியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தவுடன் விரைந்து முடித்து தரப்படும். ஐஸ் வாடி பகுதி மீனவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஒன்றிய குழு தலைவர் முத்துமாணிக்கம்: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திர ராஜன்பட்டினம் மனோரா சுற்றுலா தளத்தில் பயிற்சி கட்டிடம் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகளை செய்திட மாவட்ட கலெக்டர் தனது சொந்த நிதியை ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குழ.செ.அருள்நம்பி, கருப்பையா, செய்யது முகமது, சுதாகர், உமா, அமுதா, கவிதா, அருந்ததி, அழகுமீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News