உள்ளூர் செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா- தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு தொடருமா?- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2022-06-10 10:03 GMT   |   Update On 2022-06-10 10:03 GMT
  • கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • புளியரையில் மீண்டும் கொரோனா நோய் தடுப்பு சோதனை சாவடி மூலம் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

செங்கோட்டை:

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

எனவே கேரளாவை ஒட்டி உள்ள தமிழகத்தில் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், பலசரக்கு, அரிசி, காய்கறி கொண்டு செல்லப்படுகிறது. கட்டுமான பொருட்களையும் கொண்டு செல்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மேலும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்து வியாபாரம் சம்பந்தமாக மக்கள் அதிகளவில் தினந்தோறும் பேருந்துகள் மூலம் வந்து செல்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் தென்காசி, விருதுநகர், நெல்லை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் திருவனந்தபுரம் வந்து தமிழக எல்லையான புளியரை வழியாகத்தான் வருவார்கள்.

எனவே தமிழக மக்களின் நலன்கருதி எல்லை பகுதியான புளியரையில் மீண்டும் கொரோனா நோய் தடுப்பு சோதனை சாவடி மூலம் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதன்மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News